கோவை: கோவையில் குடும்பத்தகராறு காரணமாக காந்திபுரம் மேம்பாலத்தில் இருந்து குதித்து ஆண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவையில் குடும்பத்தகராறு காரணமாக காந்திபுரம் மேம்பாலத்தில் இருந்து குதித்து ஆண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை இரத்தினபுரி பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார் (35). இவர் இன்று வீட்டில் சண்டை போட்டுக் கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் வேகமாக கிளம்பியுள்ளார்.
இதனை தொடர்ந்து அதிர்ச்சி அடைந்த பிரேம்குமாரின் குடும்பத்தார் சந்தேகத்தின் அடிப்படையில் ரத்தினபுரி காவல் நிலையத்தில் புகார் அளித்து கொண்டிருந்தனர்.
அப்போது, காவல் நிலையத்தில் இருந்த வாக்கி டாக்கியில் காந்திபுரம் மேம்பாலத்தில் இருந்து TN66 S 6262 என்ற இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் வாகனத்தை நிறுத்திவிட்டு பாலத்தின் மேல் இருந்து கீழே விழுந்து தற்கொலையில் செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சந்தேகமடைந்த போலீசாரும், பிரேம்குமாரின் உறவினர்களும் வந்து பார்த்தபோது தற்கொலையில் ஈடுபட்டவர் பிரேம்குமார் என உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் பிரேம்குமார் லேசாக மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது.

அதேபோல, இவர் ஊரடங்கின் போது காரில் வைத்து மது விற்பனை செய்ததாக போலீசாரிடம் மாட்டிக் கொண்டதும், பின்னர் அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என விடுவிக்கப்பட்டதும் தற்போது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, போலீசார் தற்கொலையில் ஈடுபட்ட பிரேம்குமாரின் உடலை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.