திருப்பூரில் கணவர் கைவிட்டதால் மனமுடைந்த இளம்பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விஷம் குடித்து தற்கொலை முயற்சி!

திருப்பூர்: திருப்பூரில் கணவர் கைவிட்டதால் மனமுடைந்த இளம்பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


திருப்பூர்: திருப்பூரில் கணவர் கைவிட்டதால் இளம்பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ண தீபக் (26), முத்துச்செல்வி(23) இருவரும் உறவினர்களாக இருந்த நிலையில் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர். இவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு யாருக்கும் தெரியாமல் ரகசியமாக திருமணம் செய்து அவரவர் வீட்டில், அலைபாயுதே சினிமா பாணியில் வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்நிலையில், கிருஷ்ண தீபக் முத்துச்செல்வியடம் இருந்து விலகி சென்றுள்ளார். இவரின் வீட்டில் வசதியான இடத்தில் பெண் பார்த்து திருமணம் செய்து கொள்ளலாம் என தெரிவித்ததால் இவர் முத்துச்செல்வி தவிர்த்து வந்துள்ளார்.

இதனையடுத்து, முத்துச்செல்வி தனது தாயாரிடம் தெரிவித்து உடுமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள சமூக நலத்துறை அலுவலகத்தில் இருவருக்கும் இடையே சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அப்போது கிருஷ்ண தீபக் முத்துச்செல்வியை அவதூறாக பேசியுள்ளார். இதில் மனமுடைந்த முத்துச்செல்வி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்தார்.



பின்னர் உடனடியாக அவரை மீட்ட அலுவலர்கள் மற்றும் உறவினர்கள் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆத்திரமடைந்த உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவலறிந்து விரைந்து வந்த வீரபாண்டி போலீசார், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து கலைந்து சென்றனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...