நீலகிரி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நவீன நீலகிரியை உருவாக்கிய ஜான் சலீவனின் 232வது பிறந்தநாள் கொண்டாட்டம்!

நீலகிரி: நவீன நீலகிரியை உருவாக்கிய ஜான் சலீவனின் 232வது பிறந்தநாள் கொண்டாட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

நீலகிரி: நவீன நீலகிரியை உருவாக்கிய ஜான் சலீவனின் 232வது பிறந்தநாள் கொண்டாட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

நீலகிரி மலை மாவட்டம் என்பது வெளியுலகிற்கு தெரியாமல் இருந்த வந்த நிலையில், 200 ஆண்டுகளுக்கு முன் கோவை மாவட்ட ஆட்சியராக இருந்த ஜான் சல்லீவன் நீலகிரி மாவட்டத்தை வெளி உலகிற்கு அறிமுகப்படுத்தினார்.

அவர் நீலகிரி மாவட்டம் வந்தவுடன் கோத்தகிரி அருகே உள்ள கன்னேரிமுக்கு பகுதியில் ஒரு பங்களாவை கட்டி அங்கு குடியிருந்து, நீலகிரி மாவட்ட ஆட்சியராக கூடுதல் பொறுப்பேற்று கொண்டார். பின்னர் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டார். தற்போது இந்த பங்களா நினைவிடமாக மாற்றப்பட்டது.

மேலும், பல்வேறு கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு கோடை காலத்தில் தற்போது நடைபெறும் பல்வேறு விழாக்களுக்கும் வித்திட்ட ஜான் சலீவனின் 232வது பிறந்த நாள் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. மேலும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.



பின்னர் மாவட்ட ஆட்சியர் கூறுகையில், ஜான் சலீவன் நினைவுப்பூங்கா பணிகள் 2 மாதத்தில் நிறைவு பெறும் எனவும், தற்போது பொதுமக்கள் சமூக இடைவெளி கடைபிடித்து முகக் கவசம் அணிந்து அத்தியாவசிய தேவைக்கு மட்டும் வீட்டில் இருந்து வெளியே வர வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் படுக இன மக்கள், பழங்குடியின மக்களின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...