கோவை: சட்டத்திற்கு புறம்பான வகையில் வசூல் செய்யும் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு நீடித்து வரும் நிலையில் மைக்ரோ பைனான்ஸ் மூலம் பெற்ற கடன்களுக்கு அதிக வட்டி வசூலிப்பதாகவும் உடனே திருப்பி செலுத்த வலியுறுத்தி ஆட்கள் மூலமாகவும் அதிக வட்டி செலுத்த வேண்டி வரும் என தொடர்ந்து மிரட்டுவதாகவும் மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்கக் கூறி பாதிக்கப்பட்ட பெண்கள் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க நிர்வாகிகளுடன் வந்திருந்து மனு அளித்தனர்.
இது குறித்து செல்வபுரம் பகுதியை சேர்ந்த பர்வீன் என்பவர் கூறுகையில், தங்கள் பகுதியில் கிராம விடியல், முத்தூட், அரைஸ், தனலட்சுமி என பல்வேறு மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களில் ஏராளமான சுய உதவி குழுவினர் கடன் பெற்று தொழில் செய்து வருவதாக தெரிவித்தார். 10 பேர் முதல் 30 பேர் வரை உள்ள குழுக்கள் இருப்பதாகவும் தான் கடந்த மூன்று வருடங்களாக மைக்ரோ பைனான்ஸ் மூலம் கடன் பெற்று கவரிங் நகைகள், துணி விற்பனை செய்து வருவதாக தெரிவித்தார்.
மேலும், 30,000 ரூபாய் கடனாக பெற்று இதுவரை முறையாக பணம் செலுத்தி வந்த நிலையில் கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக தவணைகள் செலுத்த முடியவில்லை என்றார். அரசு கொள்கை முடிவு எடுக்கும் வரை கட்டாய பண வசூல் செய்யக்கூடாது என்ற நிலையில் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனம் ஆட்கள் பணம் கட்ட சொல்லி நிர்ப்பந்தம் செய்வதுடன் அதிக வட்டி கட்ட நேரிடும் என மிரட்டுவதாக தெரிவித்தார்.
இதேபோல் கிராம விடியல் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த ராதா என்பவர் கூறுகையில், வாரம் 640 ரூபாய் என செலுத்தி வந்ததாகவும் தற்போது செலுத்த முடியாத சூழலில் தொடர்ந்து பணத்தை உடனடியாக கட்ட சொல்லி மிரட்டுவதாக கூறினார். அரசு கொள்கை முடிவு எடுக்கும் வரை பணம் செலுத்த நிர்ப்பந்தம் செய்வதை நிறுத்த மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.