கோவை: கொரோனா பரவலை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் லாபத்திற்காக போக்குவரத்து ஊழியர்களை பலிகாடாக்கும் கழக நிர்வாகத்தை கண்டித்து கோவையில் அனைத்து பணிமனைகள் முன்பு போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக அனைத்து பகுதிகளிலும் 50 சதவீத பேருந்துகள் 60 சதவீத பயணிகளுடன் இயங்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. பேருந்துகள் போதுமானதாக இல்லாததால் பயணிகள் ஓட்டுநர், நடத்துநர் கட்டுப்பாட்டை மீறி பேருந்தில் ஏறுவதாகவும் இதனால் தனிமனித இடைவெளி கடைப்பிடிக்கப்படாமல் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதால் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் கூறி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக மாநிலம் முழுவதும் உள்ள பணிமனைகள் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட அனைத்து போக்குவரத்து சங்கங்கள் அழைப்பு விடுத்தது. இதன் ஒரு பகுதியாக கோவையில் சுங்கம், ஒண்டிபுதூர், உக்கடம் உள்ளிட்ட 14 பணிமனைகள் முன்பும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தினமும் பேருந்துகள் மற்றும் பணிமனை, கழிவறை, ஓய்வறை ஆகியவற்றை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும், போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கிட வேண்டும், லாப காரணத்திற்காக அதிக வசூல் கேட்கும் போக்கை கிளை நிர்வாகம் கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பப்பட்டது.

சுங்கம் பணிமனை முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு பொதுச் செயலாளர் வேளாங்கண்ணிராஜ், அருணகிரிநாதன், எல்பிஎப் நாகராஜ், எஐடியுசி அண்ணாதுரை, பணியாளர் சங்கம் வில்லியம்ஸ் உள்ளிட்டோர் தலைமையில் ஏராளமானோர் பங்கேற்றனர்.