கோவை: தெளிவான அறிக்கை கிடைக்கப் பெறும் வரை தொழில் நிறுவனங்களின் மின் இணைப்பை துண்டிக்கக் கூடாது என்று தொழில் அமைப்புகள் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
கோவை: தெளிவான அறிக்கை கிடைக்கப் பெறும் வரை தொழில் நிறுவனங்களின் மின் இணைப்பை துண்டிக்கக் கூடாது என்று தொழில் அமைப்புகள் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
தொழில் நிறுவனங்களுக்கு அடுத்த மூன்று மாதங்களுக்கு மின் கட்டணம் விதிக்கக் கூடாது எனவும் கட்டணம் செலுத்தாத தொழில் நிறுவனங்களின் மின் இணைப்பை துண்டிக்கக் கூடாது என்று வலியுறுத்தி கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு போசியா(Focia) இன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.
இதுகுறித்து டேக்ட் அமைப்பின் கோவை மாவட்ட தலைவர் ஜேம்ஸ் கூறுகையில், கடந்த 6ம் தேதி மின்சார துறை அமைச்சரை சந்தித்து தொழில் நிறுவனங்களுக்கு மின் கட்டண சலுகை வழங்க வேண்டும் என்றும், அடுத்த 3 மாதத்திற்கு மின்கட்டணம் ரத்து செய்ய கோரிக்கை வைத்தோம். இதேபோல் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடமும் கோரிக்கை வைத்ததாக தெரிவித்தார்.
இருவரும் முதலமைச்சரிடம் பேசி நல்ல முடிவை அறிவிப்பதாக கூறிய நிலையில், 15ம் தேதி மின் கட்டணம் செலுத்த கடைசி நாள் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் தொழில் முடங்கியுள்ள சூழலில் மேற்குறிப்பிட்ட தேதிக்குள் தொழில் நிறுவனங்கள் மின்கட்டணம் செலுத்த முடியாது எனவும் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் அளிக்க வேண்டும் என்றார்.
மேலும், மின்கட்டணம் குறித்து தெளிவான முடிவு எடுக்கும் வரை மின் இணைப்பை துண்டிக்கக் கூடாது என்று மாவட்ட ஆட்சியரிடமும் மின்வாரியத்திடம் மனு அளித்துள்ளதாக தெரிவித்தார். மேலும் ஏற்கனவே தொழில்கள் முடங்கி உள்ள நிலையில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டால், தொழில்கள் மேலும் பாதிக்கப்படும் என்று தெரிவித்தார்.