திருப்பூரில் அதிகரித்து வரும் தீண்டாமை கொடுமைகள் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி சாதிய ஒழிப்பு கூட்டியக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்!

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் அதிகரித்து வரும் தீண்டாமை கொடுமைகள் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி சாதிய ஒழிப்பு கூட்டியக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் அதிகரித்து வரும் தீண்டாமை கொடுமைகள் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி சாதிய ஒழிப்பு கூட்டியக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் அவினாசி பழங்கரை ஊராட்சிக்குட்பட்ட தேவம்பாளையம் பகுதியில் வசிக்கும் லோகநாதன் என்ற தலித் சமுதாயத்தை சேர்ந்தவரை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கூறியவர்கள் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரியும், பொய் வழக்கில் கைது செய்யப்பட்ட லோகநாதனை உடனடியாக விடுதலை செய்யக்கோரியும், திருப்பூர் மாவட்டம் பல்லடம் முததாண்டிபாளையம் பட்டியல் சாதி மக்களுக்கு மயான வசதி செய்து தர வேண்டும் என்று சாதிய ஒழிப்பு கூட்டியக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



அதேபோல், திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதிகளில் தலித் மக்கள் வசிக்கும் வீடுகளுக்குள் சென்று அவர்கள் சமைத்த உணவுகளை எடுத்து வெளியில் வீசி அத்துமீறல்களில் ஈடுபட்ட நகராட்சி ஆணையர் மீது நடவடிக்கை எடுப்பதோடு, திருப்பூர் மாவட்டத்தில் அதிகரித்து வரும் தீண்டாமைக் கொடுமைகளிலிருந்து உரிய நடவடிக்கை எடுத்து, அவள் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி திருப்பூர் குமரன் சிலை முன்பு சாதிய ஒழிப்பு கூட்டியக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...