திருப்பூரில் உலக இரத்ததானம் தினத்தை முன்னிட்டு சிகரங்கள் அறக்கட்டளை சார்பில் இரத்ததான முகாம் - 131 யூனிட் இரத்தம் பெறப்பட்டது!

திருப்பூர்: திருப்பூரில் உலக இரத்த கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு சிகரங்கள் அறக்கட்டளை சார்பாக இரத்ததான முகாம்கள் சிறப்பாக நடைபெற்றது.

திருப்பூர்: திருப்பூரில் உலக இரத்த கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு சிகரங்கள் அறக்கட்டளை சார்பாக இரத்ததான முகாம்கள் சிறப்பாக நடைபெற்றது.

உலகம் முழுவதும் நேற்று இரத்ததான தினம் கொண்டாடப்பட்டது. இரத்ததானம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் குறும்படம் வெளியிடப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இந்நிலையில், திருப்பூரில் உலக இரத்த கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு சிகரங்கள் அறக்கட்டளை சார்பாக நேற்று நடைபெற்ற இரத்ததான முகாம்கள் மூலம்

131 யூனிட் இரத்தம் பெறப்பட்டது.

இதில் நஞ்சப்பா பள்ளி முன்னாள் மாணவர்களுடன் இணைந்து 15 வேலம்பாளையத்தில் நடத்திய இரத்ததான முகாமில் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை குழுவினர் 57 யுனிட் இரத்தம் தானமாக பெற்றனர்.



அதேபோல, டிரீம் 20 பசுமை அமைப்புடன் இணைந்து சின்னச்சாமி அம்மாள் மேல்நிலைப்பள்ளியில் நடத்திய இரத்ததான முகாமில் உடுமலை அரசு மருத்துவமனை குழுவினர் 74 யூனிட் இரத்தம் தானமாக பெற்றனர். 

இதையடுத்து, நேற்று நடந்த ரத்ததான முகாமில் பெறப்பட்ட 131 யூனிட் இரத்தம் திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கும் உடுமலைப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது. 







Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...