கோவையில் கொரோனா: இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 28 வயது இளைஞர் உயிரிழப்பு!

கோவையில் கொரோனா: இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 28 வயது இளைஞர் உயிரிழப்பு!


கோவை: கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 28 வயது இளைஞர் உயிரிழந்தார்.

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் ராமர் கோவில் வீதி பகுதியைச் சேர்ந்த 28 வயது இளைஞர் சென்னையில் இருந்து நேற்று முன்தினம் கோவை வந்துள்ளார். 

இவருக்கு நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவர்கள் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். 

இந்நிலையில் நேற்று அவர் இஎஸ்ஐ மருத்துவமனையில் உயிரிழந்தார். இஎஸ்ஐ மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை இல்லாத காரணத்தால் உயிரிழந்த இளைஞரின் உடல் கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு உள்ளது. 

கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்த இரண்டாவது நபர் இவராவார். கொரோனா தொற்று காரணமாகத்தான் இவர் இறந்தாரா என அறிக்கைக்காக காத்திருப்பதாக மருத்துவத் துறை வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update 11 AM: Ramar Koil Street, RG PUDUR fumigated and isolated 





Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...