கோவையில் பிரபல பீடி கம்பெனி பெயரில் போலி பீடி கட்டுகளை கடைகளுக்கு விற்பனை செய்த நபர் கைது!

கோவையில் பிரபல பீடி கம்பெனி பெயரில் போலி பீடி கட்டுகளை கடைகளுக்கு விற்பனை செய்த நபர் கைது!

கோவை: கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பிரபல கம்பெனி பெயரில் போலி பீடி கட்டுகளை கடைகளுக்கு விற்பனை செய்த நபரைதுடியலூர் போலிசார் கைது செய்தனர்.

கோவையில் பிரபல பீடி கம்பெனியான 10ம் நம்பர் பீடி பெயரில் போலி பீடி கட்டுகள் கடைகளுக்கு சப்ளை செய்யப்படுவதாக அந்நிறுவனத்திற்கு தகவல் வந்துள்ளது. 

இதைத்தொடர்ந்து, இன்று மாலை கவுண்டம்பாளையம் பகுதியில் பீடி கம்பெனி ஊழியர்கள் கடைகளில் ஆய்வு செய்த போது அங்கு போலி பீடி கட்டுகளை விற்பனை செய்ய வந்த நபரை கையும் களவுமாக பிடித்து துடியலூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரை பிடித்து அவரிடம் இருந்த போலி பீடி கட்டுகளை பறிமுதல் செய்து காவல் நிலையம் அழைத்துச்சென்றனர். 

பீடி கம்பெனியின் புகாரின் அடிப்படையில் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் தென்காசியை சேர்ந்த பிச்சையா என்கின்ற சூர்யா என்பதும் அங்கு கொத்தனார் வேலை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது.

மேலும், தற்போது கொரோனா ஊரடங்கால் வேலையில்லாமல் இருந்ததால் அங்கிருந்து பிரபல கம்பெனி பெயரில் தயாரிக்கப்படும் போலி பீடி கட்டுக்களை கொண்டு வந்து கோவையில் உள்ள கடைகளில் விற்பனை செய்து வந்ததாக தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து, அவரை கைது செய்த துடியலூர் போலீஸார் அவரிடம் இருந்து 100 போலி பீடி பண்டல்களை பறிமுதல் செய்து அவரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...