திருப்பூரில் கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் 950 நபர்கள் இரத்ததானம்..! நன்றி தெரிவித்த மாவட்ட ஆட்சியர்!

திருப்பூர்: கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காலகட்டத்தில் திருப்பூரில் 950 நபர்கள் இரத்ததானம் செய்துள்ளனர்.


திருப்பூர்: கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காலகட்டத்தில் திருப்பூரில் 950 நபர்கள் இரத்ததானம் செய்துள்ளனர். 

உலகம் முழுவதும் இன்று இரத்ததான தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இரத்ததானம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் குறும்படம் வெளியிடப்பட்டு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி கொண்டு வருகிறது. 

இரத்த தானத்தின் முக்கியத்துவம் குறித்தும், ரத்ததானம் செய்வதால் பல உயிர்கள் காப்பாற்றப்படுகிறது, ரத்த தானம் குறித்த விழிப்புணர்வை தங்கள் குடும்பத்தினருக்கும் பொது மக்களுக்கும் ஏற்படுத்த வேண்டும் என்று இந்த குறும் படத்தின் வாயிலாக திருப்பூர் ஆட்சியர் விஜயகார்த்திகேயன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 



திருப்பூரில் கடந்த ஒரு வருடத்தில் 75 முகாம்கள் நடத்தப்பட்டது. இதில் 4500 நபர்கள் ரத்த தானம் அளித்துள்ளனர். குறிப்பாக கொரோனா ஊரடங்கு காலகட்டத்திலும் 950 நபர்கள் ரத்ததானம் செய்துள்ளனர். இரத்த தானம் செய்த அனைவருக்கும் இந்தக் குறும்படத்தின் வாயிலாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.விஜயகார்த்திகேயன் மற்றும் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வள்ளி சத்தியமூர்த்தி நன்றிகளை தெரிவித்தனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...