கோவை மாவட்டத்தில் முக கவசம் அணியாதவர்களிடம் இருந்து 7 லட்சம் ரூபாய் அபராதம் வசூல்..!

கோவை: கொரோனா வைரஸ் தொற்று உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் மற்றும் கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும் என மத்திய-மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

கோவை: கொரோனா வைரஸ் தொற்று உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் மற்றும் கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும் என மத்திய-மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

முக கவசம் அணிவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், முக கவசம் அணியாதவர்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டும் என்று மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் அறிவித்தன. இதன்படி, கோவையில் முக கவசம் அணியாதவர்களிடமிருந்து ரூ.100 அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி இதுவரை, கோவை மாநகரின் கிழக்கு மண்டலத்தில் 2 ஆயிரத்து 700 பேரிடம் ரூ.2 லட்சத்து 70 ஆயிரத்து 30, மேற்கு மண்டலத்தில் 691 பேரிடம் இருந்து ரூ.69,100 ரூபாய், வடக்கு மண்டலத்தில் 637 பேரிடம் இருந்து ரூ.63 ஆயிரத்து 700 மற்றும் தெற்கு மண்டலத்தில் 314 பேரிடம் இருந்து ரூ.31 ஆயிரத்து 400, கோவை மத்திய மண்டலத்தில் 1,290 பேரிடம் இருந்து ரூ.ஒரு லட்சத்து 29 ஆயிரம் என 5 ஆயிரத்து 356 பேரிடம் இருந்து ரூ.5 லட்சத்து 35 ஆயிரத்து 600 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

இதே போல், கோவை நகராட்சி பகுதிகளில் ரூ.97 ஆயிரமும்,டவுன் பஞ்சாயத்துகளில் ரூ.61 ஆயிரமும், ஊராட்சிகளில் ரூ.13 ஆயிரத்து 500 என மொத்தம் ரூ.7 லட்சத்து 7 ஆயிரத்து 100 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை தொடரும் எனவும் பொதுமக்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...