தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருகிறது. மற்ற மாவட்டங்களை காட்டிலும் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் இந்த வைரஸ் தனது தீவிரத்தை காட்டி வருகிறது.

அதன்படி இன்று ஒரே நாளில் சென்னையில் மட்டும் 1,487 பேர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் மொத்தமாக 1989 பேர் இன்று கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது இதில், பிற மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்து வந்தவர்கள் மட்டும் 33 பேர்.
இதுவரை இல்லாத அளவு, இறப்பு எண்ணிக்கையும் உச்சத்தை தொட்டுள்ளது. இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 30 பேர் பலியாகியுள்ள சோக சம்பவம் அரங்கேறியுள்ளது. நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் 40 ஆயிரத்து 698 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டிருந்த சூழலில் இன்றைய நிலவரப்படி 42 ஆயிரத்து 687 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் மக்கள் கடும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.