கொரோனாவால் முடங்கியுள்ள கைத்தறி தொழிலை மீட்க, உற்பத்தி விலைக்கே பட்டு சேலைகள் விற்பனை..!

கோவை: தமிழகத்தில் முதன் முறையாக கொரோனாவால் முடங்கியுள்ள கைத்தறி தொழிலை மீட்க, உற்பத்தி விலைக்கே பட்டு சேலைகளின் விற்பனையை துவக்க சிறுமுகை பட்டு உற்பத்தியாளர்கள் முடிவு செய்துள்ளனர். மேலும், நாளை மறுநாள் முதல் விற்பனை துவக்கப்படும் என நெசவாளர் சங்கத்தின் தலைவர் நாகராஜ் தெரிவித்துள்ளார்.


கோவை: தமிழகத்தில் முதன் முறையாக கொரோனாவால் முடங்கியுள்ள கைத்தறி தொழிலை மீட்க, உற்பத்தி விலைக்கே பட்டு சேலைகளின் விற்பனையை துவக்க சிறுமுகை பட்டு உற்பத்தியாளர்கள் முடிவு செய்துள்ளனர். மேலும், நாளை மறுநாள் முதல் விற்பனை துவக்கப்படும் என நெசவாளர் சங்கத்தின் தலைவர் நாகராஜ் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை பகுதியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைத்தறி நெசவுதறிகள் இயங்கி வருகிறது.

கோராகாட்டன், சாப்ட்சில்க், முகூர்த்த புடவைகள் என பல்வேறு வகையான பட்டுபுடவைகள் இங்குள்ள பல்வேறு கிராமங்களில் நெசவு செய்யப்பட்டு, நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

காலம் காலமாக நெசவு தொழிலை நம்பி பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வாழ்ந்து வரும் நிலையில், தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக கைத்தறி தொழில் கடுமையாக பாதிக்கபட்டுள்ளது.

இதனால், இத்தொழிலை நம்பி இருந்த ஆயிரக்கணக்கான நெசவாளர் குடும்பங்கள் வேலைவாய்ப்பினை இழந்து கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றனர்.

எனவே, கடும் சரிவை சந்தித்து வரும் நிலையில் கைத்தறி தொழிலை மீட்டெடுக்கும் வகையில் சிறுமுகை கைத்தறி உற்பத்தி மற்றும் விற்பனையாளர் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் இன்று நடைப்பெற்றது.



சங்கத்தின் தலைவர், நாகராஜ் தலைமையில் நடைப்பெற்ற ஆலோசனை கூட்டத்தில் மக்களிடம் பொருள் வாங்கும் திறன் குறைந்து வரும் சூழலில், அதற்கு ஏற்றவாறு சலுகைகளை அறிவித்து தீர்மானம் நிறைவேற்றபட்டுள்ளது.



அதன்படி ,தமிழகத்தில் முதல் முறையாக கைத்தறி பட்டு புடவைகள் அனைத்தும் உற்பத்தி விலைக்கே விற்க கூட்டத்தில் முடிவு செய்யபட்டுள்ளது, அதன்படி வரும் 15 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 16 ஆம் தேதி வரை சிறுமுகையில் உள்ள அனைத்து பட்டு சேலை உற்பத்தியாளர்களிடம் இருந்து உற்பத்தி விலைக்கே புடவைகளை வாங்கிகொள்ளலாம் என அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஆகவே, இந்த சலுகையினை மக்கள் பயன்படுத்தி தரமான பட்டு சேலைகளை உற்பத்தி விலைக்கே வாங்கி பயனடையலாம் எனவும், மேலும் முடங்கியுள்ள கைத்தறி தொழில் மீண்டும் தழைக்கவும் கொரோனாவால் பாதிக்கபட்டுள்ள கைத்தறி தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலைவாப்பு கிடைக்க உறுதுணையாக இருக்கும் என, சங்க தலைவர் நாகராஜ் தெரிவித்துள்ளார்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...