திருப்பூர்: திருப்பூரில், காதல் ஜோடி நெருக்கமாக இருந்ததை நேரில் பார்த்த சிறுவனை கொலை செய்த காதல் ஜோடியை கைது செய்து ஊத்துக்குளி போலிசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்: திருப்பூரில், காதல் ஜோடி நெருக்கமாக இருந்ததை நேரில் பார்த்த சிறுவனை கொலை செய்த காதல் ஜோடியை கைது செய்து ஊத்துக்குளி போலிசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி அருகே குளத்தில் கொடூரமான முறையில் 8 வயது சிறுவன் நேற்று கொலை செய்யப்பட்டு கிடந்தான், அவனது பிணத்தை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த கொலை சம்பவம் திருப்பூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள அஜித் என்ற இளைஞரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அஜித் பாலிடெக்னிக் மாணவர் என்பதும், அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்ததாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று அந்த பாலிடெக்னிக் மாணவரும், அவர் காதலியும் புத்தூர் பள்ளபாளையம் குளத்தில் சந்தித்துள்ளனர். குளத்தில் தண்ணீர் இல்லாததால் ஆங்காங்கே முட்புதர்கள் வளர்ந்து உள்ள நிலையில், இதனால் காதலர்கள் இருவரும் தனிமையில் நெருக்கமாக இருந்ததாக தெரிகிறது.
இதை அங்கு வந்த சிறுவன் பவனேஷ் பார்த்து விட்டதால் ஊரில் பெரியவர்களிடம் இதை சொல்லி விடுவான் என்ற பயத்தில் காதலர்கள் இருவரும் சேர்ந்து சிறுவனை பாட்டிலால் குத்தி கொலை செய்து விட்டு தப்பி சென்றுள்ளனர்.
இதுகுறித்து, அஜித் மற்றும் அவரது காதலி இருவரையும் கைது செய்து ஊத்துக்குளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.