சிங்காநல்லூர் தொகுதியில் 4 நாட்களுக்கு ஒருமுறை சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் - எம் எல் ஏ நா.கார்த்திக்

சிங்காநல்லூர் தொகுதியில் 4 நாட்களுக்கு ஒருமுறை சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் - எம் எல் ஏ நா.கார்த்திக்

கோவை:சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் குறைந்தபட்சம் 4 நாட்களுக்கு ஒருமுறை சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்ய மாநகராட்சி நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம் எல் ஏ வேண்டுகோள் விடுத்துள்ளார். 

சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு 8 நாட்கள் ,

முதல் 12 நாட்கள் அல்லது சில இடங்களில் 20 அல்லது 30 நாட்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் விநியோகிக்கும் அவலம் இருந்து வருகிறது.

முறையற்ற குடிநீர் விநியோகத்தால், குடிநீர் பற்றாக்குறை, குடிநீர் பஞ்சம் அதிகரித்து பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்குவதில் மிகுந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது.கடந்த 9 ஆண்டு காலமாக குடிநீர் திட்டம் தொடர்பாக எந்த ஒரு உள்கட்டமைப்பு பணிகளையும், கோவை மாநகராட்சி நிர்வாகம் சரியாக செய்யாத காரணத்தால் கடுமையான குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது, என அவர் சுட்டி காட்டியுள்ளார். 

இதனால், கோவை மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில், குறிப்பாக சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட கீழ்க்கண்ட பகுதிகளில்

மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.

*7 வது வட்டம் ஹோப் காலேஜ் , தண்ணீர் பந்தல் உள்ளிட்ட பகுதிகள்*

*38 வது வட்டம் பீளமேடு பகுதிகள்*

*39 வது வட்டம் பீளமேடு பகுதிகள்*

*40 வது வட்டம் ஆவாராம்பாளையம் பகுதிகள்*

*53 வது வட்டம் சித்தாபுதூர் பகுதிகள்*

*55 வது வட்டம் பாப்பநாயக்கன் பாளையம், பழையூர் உள்ளிட்ட பகுதிகள்*

*56 வது வட்டம் பீளமேடு புதூர், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகள்*

*57 வது வட்டம் மசக்காளி பாளையம், வரதராஜபுரம் , லட்சுமிபுரம் உள்ளிட்ட பகுதிகள்*

*58 வது வட்டம் நீலிக் கோணாம்பாளையம், ஜோதி நகர் உள்ளிட்ட பகுதிகள்*

*59 வது வட்டம் எச்.ஐ.எச்.எஸ் காலனி , ஒண்டிப்புதூர் பகுதிகள்*

*60 வது வட்டம் ஒண்டிப்புதூர் பகுதிகள்*

*61 வது வட்டம் நந்தா நகர் , நொய்யல் நகர் உள்ளிட்ட பகுதிகள்*

*62 வது வட்டம் கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதிகள்*

*63 வது வட்டம் சிங்காநல்லூர் , கள்ளிமடை உள்ளிட்ட பகுதிகள்*

*64 வது வட்டம் உப்பிலிபாளையம் , ஹவுசிங் யூனிட் உள்ளிட்ட பகுதிகள்*

*65 வது வட்டம் சௌரிபாளையம் பகுதிகள்*

*66 வது வட்டம் உடையாம்பாளையம் பகுதிகள்*

*74 வது வட்டம் GM நகர் , பாரதிபுரம் , கலைஞர் நகர் உள்ளிட்ட பகுதிகள்*

*75 வது வட்டம் நஞ்சுண்டாபுரம் , சாரமேடு 

ஆகிய பகுதிகளில் வசிக்கக்கூடிய பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் 8 நாட்கள் முதல் 12 நாட்களுக்கு ஒருமுறைதான் செய்வதால் குடிப்பதற்குக் கூட குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் மிகவும் பரிதவித்துக் கொண்டு இருக்கிறார்கள்.. மேலும், பல பகுதிகளில் 20 அல்லது 30 நாட்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் விநியோகிக்கும் அவல நிலை உள்ளது, எனவும்.குறிப்பிட்டார். 

*பொது மக்களுடைய வாழ்வாதாரமாக , உயிர் நாடியாகத் திகழக்கூடிய குடிநீர் விநியோகத்தில் , மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து கவனக்குறைவாக அலட்சியப்போக்கையே கடைப்பிடித்து வருகிறது. இந்த குடிநீர் பிரச்சினை தொடர்பாக பலமுறை மாநகராட்சி ஆணையாளர் , கிழக்கு மண்டல உதவி ஆணையாளர் , உதவி பொறியாளர் ( குடிநீர் ) ஆகியோரை தொடர்பு கொண்டு பேசியும், கடிதங்கள் கொடுத்தும் குடிநீர் விநியோகம் இதுவரை சீர் செய்யப்படவில்லை*, என சுட்டி காட்டியுள்ளார்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...