நீலகிரியில் ஒர் ஆண்டாக செயல்படாமல் உள்ள பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு கோபுரத்தை சரி செய்ய வேண்டும் என கோரிக்கை

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களை திறக்க அனுமதி வழங்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட அனைத்து கிறிஸ்தவ பெந்தகோஸ்தே சபைகள் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

நீலகிரி: நீலகிரி மாவட்ட விடுதலை கட்சியின் சார்பில் கூடலூர் ஓவேலி பேரூராட்சியில் உள்ள சந்தன மலையில், ஒர் ஆண்டு காலமாக செயல்படாமல் உள்ள பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு கோபுரத்தை சரி செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

"ஓவேலி பேரூராட்சி பகுதியில் சுமார் 30 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். பேரூராட்சி பகுதியில் சுமார் 25 ஆயிரம் செல்போன் இணைப்புகளும் 200க்கும் மேற்பட்ட தரைவழி தொலைபேசி இணைப்புகளும் உள்ளன. இப்பகுதியில் சந்தன மலை என்னும் இடத்தில் செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வந்தது. கடந்த ஓராண்டுக்கு மேலாக செல்போன் கோபுரம் செயல்படுவதில்லை, என மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

மேலும், இதனால் பொதுமக்களுக்கு பிஎஸ்என்எல் செல்போன் இணைப்பு கிடைப்பதில்லை எனவும், மேலும் மருத்துவ உதவிக்காக அழைப்பதற்குக் கூட முடியாததால் உயிரிழப்பு ஏற்படுகிறது, எனவும், அத்தியாவசிய தேவைகளுக்கான தகவல் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர், என தெரிவித்தனர்.

தற்போது கொரோனோ பெரும் தொற்று ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரி, உயர்கல்வி படிக்கும் மாணவர்கள் வீட்டிலேயே இருந்து ஆன்லைன் மூலம் கல்வி கற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது எனவும் ஆனால், செல்போன் இணைப்புகள் இல்லாததால் அவர்களின் படிப்பு கேள்விக்குறியாகி உள்ளது, என மனுவில் தெரிவித்தனர்.



மேலும், இணைய வழி பணி செய்பவர்கள் பணி மேற்கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது எனவும், எனவே பொதுமக்கள் நலன் கருதி இந்த பிஎஸ்என்எல் உயர் மின் கோபுரத்தை சரிசெய்து மக்கள் பயன்பாட்டிற்கு கிடைக்கப் பெறச் செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

மேலும், செல்போன் உயர் மின் கோபுரம் சரி செய்யாத பட்சத்தில் மிகப் பெரிய அளவிலான போராட்டம் நடத்தப்படுவுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...