திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களை திறக்க அனுமதி வழங்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட அனைத்து கிறிஸ்தவ பெந்தகோஸ்தே சபைகள் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியாவில் மார்ச் 25ம் முதல் கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் அனைத்தும் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன. இதனால், கடந்த இரு மாதங்களாகவே பக்தர்கள் கோவிலுக்கு செல்ல முடியாத நிலை நீடித்து வருகிறது.
சமீபத்தில், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், கடந்த 8ம் தேதி முதல் மத்திய அரசு வழிபாட்டுத் தலங்களை திறக்க அனுமதி அளித்தும் தமிழக அரசு இன்னும் காலம் தாழ்த்துவதாகவும், இதனால் கிறிஸ்தவ மக்கள் தேவாலயங்களுக்கு செல்ல முடியாமல் இருப்பதாக அம்மனுவில் தெரிவித்தனர்.

இதனால், திருப்பூர் மாவட்ட அனைத்து கிறிஸ்தவ சபைகள் சார்பில் தேவாலயங்களை மீண்டும் திறக்க மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.