கோவை: கோவையில் 40.67 கோடி மதிப்பில் மாநகராட்சி வார்டு எண் 71ல் எழில்மிகு நகர திட்டத்தின் கீழ் பந்தய சாலையில் மாதிரி சாலை அமைக்கும் பணியை ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்க துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி இன்று காலை துவக்கி வைத்தார்.
கோவை: கோவையில் 40.67 கோடி மதிப்பில் மாநகராட்சி வார்டு எண் 71ல் எழில்மிகு நகர திட்டத்தின் கீழ் பந்தய சாலையில் மாதிரி சாலை அமைக்கும் பணியை ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்க துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி இன்று காலை துவக்கி வைத்தார்.
குழந்தைகள் பொழுது போக்கு பூங்கா, விளையாட்டு உபகரணங்கள், திறந்த வெளி திரையரங்கு, பார்க்கிங் வசதி, பாதாசாரிகளுக்கு இடையூறு இல்லாத சிற்றுண்டி கடை, சிந்தடிக் விளையாட்டு மைதானம், உடற்பயிற்சி கூடம், அதிநவீன கழிப்பறைகள், பாதுகாப்பு அறைகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், நிழற்குடை, வை-பை (wifi) வசதி, கண்காணிப்பு கேமரா உள்ளிட்டவை இந்த திட்டத்தின் கீழ் செயல்படுத்தபட உள்ளது.
சிறப்பு திட்டங்களை செயலாக்க துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி துவக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த போது அவர் கூறுகையில்:

தமிழகம் முழுவதும் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தமிழக முதல்வர் அறிவித்து வருகிறார். குறிப்பாக, கோவை முழுவதும் பல்வேறு இடங்களில் பாலம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதாகவும், அவினாசி சாலை மேம்பாலந்துக்கு ஒப்பந்தம் கோரபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
கோவையில் உள்ள சாலைகள் மற்றும் பாலங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன எனவும் இந்த பணிகளுக்கு எழுந்த விமர்சனங்களை புறந்தள்ளிவிட்டு பணிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். மேலும், மும்பை, கொல்கத்தா, சென்னை போன்ற மக்கள் அடர்த்தி மிகுந்த பகுதிகளில் கொரோனா வேகமாக பரவுகிறது எனவும் தமிழகத்தை பொறுத்தமட்டில் போர்க்கால அடிபடையில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளபடுவதாக தெரிவித்தார்.
சென்னையில் மட்டுமன்றி மக்கள் அடர்த்தியாக இருக்கும் பகுதிகளில் வீதி வீதியாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளபட்டு வருகிறது என்றவர் எம் எல் ஏக்கள், அதிகாரிகள் முழுவீச்சில் செயல்பட்டு வருகிறார்கள் என தெரிவித்தார்.
அமைச்சர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் கோவை மாநகராட்சி சார்பில் வைக்கபட்டு இருந்த அறிவிப்பு பலகையில் ரூபாய் 40.70 கோடி செலவில் திட்டப் பணிகளுக்கான துவக்க விழா எனவும் மற்றொரு பலகையில் 40.67 கோடி எனவும் குறிப்பிட்டு இருந்தது. இந்த இரு வேறு தொகை வித்தியாசம் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஸ்மார்ட் திட்டத்தின் கீழ் பந்தய சாலையில் மாதிரி சாலை திட்ட மதிப்பு 40.70 கோடியா? இல்லை 40.67 கோடியா? என்ன என்பதை தெளிவாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விளக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.