திருப்பூர்: சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கிய பைனான்ஸ் நிறுவனம் தவணைத் தொகை கேட்டு வற்புறுத்துவதாக சுய உதவி குழுவை சேர்ந்த பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தனர்.
திருப்பூர்: சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கிய பைனான்ஸ் நிறுவனம் தவணைத் தொகை கேட்டு வற்புறுத்துவதாக சுய உதவி குழுவை சேர்ந்த பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தனர்.
திருப்பூர் அனுப்பர்பாளையம் பகுதியில் உள்ள சுய உதவி குழுவிற்கு, மைக்ரோ பைனான்ஸ் என்னும் தனியார் நிதி நிறுவனம் கடன் வழங்கி உள்ளது. ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள சூழ்நிலையில் ரிசர்வ் வங்கி ஆறு மாத காலத்திற்கு தவணைத் தொகை கேட்டு வற்புறுத்தக் கூடாது என வலியுறுத்தியுள்ள சூழ்நிலையில் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனம் தொடர்ந்து தவணைத் தொகை கேட்டு வருவதாக பெண்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
மேலும், தவணைத்தொகை கட்ட தவறியாவர்களிடம் கூடுதல் அபராதம் விதிப்பதாக பாதிக்கப்பட்ட பெண்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.