கோவை: தமிழகத்தில் மேலும் 1,875 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 38,716 ஆக அதிகரித்துள்ளது.
கோவை: தமிழகத்தில் மேலும் 1,875 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 38,716 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், தமிழகத்தில் இன்று மட்டும் 1,372 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் மொத்தம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 20,705 ஆக அதிகரித்துள்ளது.
அதேசமயம், கொரோனா வைரஸ் பாதிப்பால் இன்று மேலும் 23 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் தற்போது வரை 349 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று மட்டும் 1,407 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதன் மூலம் பாதிப்பு சென்னையில் மட்டும் எண்ணிக்கை 27,398 ஆக அதிகரித்துள்ளது.
கோவை
அதேபோல, கோவையில் மேலும் 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதன் மூலம் கோவையில் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 170 ஆக அதிகரித்துள்ளது.
அதேசமயம், திருப்பூர் மற்றும் நீலகிரியில் புதிதாக பாதிப்பு ஏற்படவில்லை. நீலகிரியில் கொரோனா தொற்று பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 14 ஆகவும், திருப்பூரில் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 114 ஆக உள்ளது.