கொரோனா தொற்று: கோவை வடவள்ளி அருகே உள்ள பொம்மனாம்பாளையம் பகுதிக்கு சீல்..!

கோவை கோவை வடவள்ளி - பொம்மனாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் உள்பட மூன்று நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அப்பகுதி முழுவதும் சீலிடப்பட்டு சுகாதாரத் துறையினரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரபட்டுள்ளது.


கோவை: கோவை வடவள்ளி - பொம்மனாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் உள்பட மூன்று நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அப்பகுதி முழுவதும் சீலிடப்பட்டு சுகாதாரத் துறையினரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரபட்டுள்ளது.

கடந்த எட்டாம் தேதி சென்னையிலிருந்து, கோவை வந்த வடவள்ளி பொம்மனாம்பாளையத்தை சேர்ந்த வாலிபருக்கு பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, அந்த 27 வயதான வாலிபர் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிகப்பபட்ட நிலையில், அவருடன் தொடர்பில் இருந்த குடும்ப உறுப்பினர்கள் தனிமைபடுத்தப்பட்டனர்.

இந்நிலையில், நேற்று அந்த வாலிபரின் தாயார் மற்றும் அவரது தங்கையும் எட்டு மாத கர்ப்பிணிக்கு கொரோனோ பரிசோதனை மேற்கொள்ளபட்டது. இந்நிலையில் இன்று இருவருக்கும் கொரனோ உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து இருவரும் சிகிச்சைக்காக இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



கொரோனா உறுதி செய்யப்பட்ட வாலிபர் அந்த பகுதி முழுவதும் சுற்றிதிரிந்தாக கூறப்பட்டுள்ள நிலையில், சுகாதாரதுறை அதிகாரிகள் அப்பகுதிக்கு சீல் வைத்துள்ளதோடு, போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.



மேலும், அப்பகுதியில் முகாமிட்டு தினமும் இருநூறு பேருக்கு பரிசோதனை மேற்கொள்ள உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...