இரண்டு மாத ஊதியம் வழங்கப்படவில்லை..! திருப்பூரில் மாநகராட்சி ஒப்பந்தம் துப்புரவு பணியாளர்கள் தர்ணா

திருப்பூர்: இரண்டு மாத ஊதியம் வழங்கப்படவில்லை என திருப்பூர் மாநகராட்சி ஒப்பந்தம் துப்புரவு பணியாளர்கள் இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர்: இரண்டு மாத ஊதியம் வழங்கப்படவில்லை என திருப்பூர் மாநகராட்சி ஒப்பந்தம் துப்புரவு பணியாளர்கள் இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாநகராட்சியின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளர்கள் சுமார் 900 பேர் பணிபுரிந்து வருகின்றனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காலத்திலும் விடுமுறை இல்லாமல் பணியாற்றிவந்த அவர்களுக்கு இன்னும் ஏப்ரல் மாதத்திற்கான ஊதியம் கூட வழங்கவில்லை என குற்றம் சாட்டினர்.



மேலும், ஏற்கனவே சிறப்பு ஊதியம் அறிவிக்கப்படாத தங்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக ஒப்பந்த அடிப்படையிலான ஊதியம் கூட வழங்கவில்லை எனவும், இதனால் தங்கள் அத்தியாவசிய பொருட்கள் கூட வாங்க முடியாத சூழ்நிலையில் இருப்பதாக கூறி இன்று கருவம்பாளையம் மண்டல அலுவலகத்தில் பணியை புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட நிர்வாகம் 420 ரூபாய் ஒப்பந்தம் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் நிலையிலும், வெறும் 300 ரூபாய் மட்டுமே வழங்குவதாகவும், ஆனால், அதையும் கூட கடந்த 2 மாதமாக வழங்கவில்லை என குற்றம் சாட்டினர்.



மாநகராட்சி நிர்வாகத்திடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் மட்டுமே பணியை தொடருவோம் என தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...