விசாகப்பட்டினத்தில் இருந்து லாரி மூலம் கடத்தி வரப்பட்ட 200 கிலோ கஞ்சாவை கோவை போதை பொருள் தடுப்பு பிரிவு காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
கோவை: விசாகப்பட்டினத்தில் இருந்து லாரி மூலம் கடத்தி வரப்பட்ட 200 கிலோ கஞ்சாவை கோவை போதை பொருள் தடுப்பு பிரிவு காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
கோவை மாவட்டம் சரவணம்பட்டி சாலை வழியாக, கஞ்சா கடத்தி வருவதாக போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைக்க பெற்றதை தொடர்ந்து கண்காணிப்பாளர் வின்சென்ட் தலைமையில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர்.

அப்போது துடியலூர்-சரவணம்பட்டி சாலையில், மதுரை பெதனியாபுரத்தை சேர்ந்த பார்த்தசாரதி என்பவர் ஓட்டி வந்த லாரி எண் TN60 AC 9965 என்ற வாகனத்தை நிறுத்தி சோதனையிட்ட போது லாரியில் 200 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில், கடத்தப்பட்ட கஞ்சாவை விசாகப்பட்டினத்தில் இருந்து இரும்பு கம்பி லோடுடன் ஏற்றி வந்து, இரும்புக் கம்பி லோடை துடியலூரில் உள்ள ஒரு கடையில் இறக்கி விட்டு மீண்டும் மதுரைக்கு எடுத்துச் செல்லும் வழியில் வெள்ளக்கிணறு அருகே லாரி வந்தபோது கஞ்சாவையும் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியையும் காவல்துறையினர் நிறுத்தி பறிமுதல் செய்தனர்.
லாரியினை ஓட்டி வந்த பார்த்தசாரதியை கைது செய்த போலீசார் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிடிபட்ட கஞ்சாவின் மதிப்பு சுமார் 40 லட்சமாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.