கோவை பெரியார் படிப்பகத்தில் இனப் பாகுபாட்டால் அமெரிக்காவில் கொல்லப்பட்ட ஜார்ஜ் பிலாய்ட் நினைவேந்தல் நிகழ்ச்சி!

கோவை: இனப் பாகுபாட்டால் அமெரிக்காவில் கொல்லப்பட்ட ஜார்ஜ் பிலாய்ட் நினைவேந்தல் நிகழ்ச்சி கோவை பெரியார் படிப்பகத்தில் நடைபெற்றது.


கோவை: இனப் பாகுபாட்டால் அமெரிக்காவில் கொல்லப்பட்ட ஜார்ஜ் பிலாய்ட் நினைவேந்தல் நிகழ்ச்சி கோவை பெரியார் படிப்பகத்தில் நடைபெற்றது.

அமெரிக்காவின் மினசோட்டா மாகாண தலைநகர் மின்னபொலிசில் கடந்த மே 25ம் தேதி ஜார்ஜ் பிளாய்ட் என்ற ஆப்பிரிக்க அமெரிக்கர், போலீஸ் அதிகாரி டெரொக் பிடியில் இருந்த போது கழுத்து நெரிக்கப்பட்டு உயிரிழந்தார். ஜார்ஜை கீழே தள்ளி அவரின் கழுத்தைத் தன் கால் முட்டியால் டெரொக் அழுத்தும் காட்சிகள் சமூகவலைதளங்களில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தின.

இதையடுத்து, ஜார்ஜின் மரணத்துக்கு நீதி வேண்டும் எனவும் அமெரிக்காவில் உள்ள ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் மீது நடத்தப்படும் இனவெறித் தாக்குதலுக்கு முடிவுகட்ட வேண்டும், அமெரிக்காவிலுள்ள அதிகார வரம்பை மாற்றியமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி லட்சக்கணக்கான மக்கள் திரண்டு பெரும் போராட்டம் நடத்தினர்.



இந்த நிலையில், இனப் பாகுபாட்டால் அமெரிக்காவில் கொல்லப்பட்ட ஜார்ஜ் பிலாய்ட்க்கு நினைவேந்தல் நிகழ்ச்சி காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் படிப்பகத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி அனைத்து இயக்கங்கள் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில் த.பெ.தி.க பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன், ஆதிதமிழர் பேரவை நிறுவனர் அதியமான், திராவிட விடுதலை கழக கோவை மாநகர மாவட்ட தலைவர் நேருதாஸ், பி.யு.சி.எல் வழக்கறிஞர் பாலமுருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...