கோவை: தமிழகமெங்கும் உள்ள பள்ளிக் குழந்தைகளுக்கு கிடைத்து வந்த சத்துணவாவது வெகு விரைவில் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று எழுத்தாளர் பாமரன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அவர் வெளியிட்டுள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது :-
கொரோனாவின் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள அனைத்து பள்ளிகளுக்கும் காலவரையின்றி விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் வசதி படைத்தோரும் வாய்ப்புள்ளோரும் வீடுகளுக்குள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு தமது பிள்ளைகளுக்கு உணவளித்து வரும் நிலையில் ஏதுமற்ற ஏழைகள் பள்ளி சென்று கொண்டிருந்த தங்கள் குழந்தைகளுக்கு உணவளிக்க இயலாது தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தியாவுக்கே வழிகாட்டியாக விளங்கும் நமது சத்துணவுத் திட்டத்திற்கு நெடியதொரு வரலாற்றுப் பாரம்பரியம் உண்டு. ஊரடங்கு அறிவிக்கப்படுவதற்கு முந்தைய நாள் வரையிலும் கூட ஒருவேளையாவது பள்ளிகளில் சத்துணவு உண்டு வந்த அச்சிறுவர்கள் பள்ளிகள் மூடப்பட்டதனால் தற்போது சத்துணவு இன்றி வாடிக் கொண்டிருக்கிறார்கள்.
பெற்றோர்கள் பெரிதளவிலான வேலை வாய்ப்பும் வருமானமும் இன்றி தவிக்கும் இப்பேரிடர் காலத்தில் தங்களது குழந்தைகளுக்கு எப்படி அவர்களால் உணவளிக்க முடியும்?
எனவே, ஏற்கெனவே எண்ணற்ற இடர்ப்பாடுகளுக்கு ஊடாக பணியாற்றி வரும் தமிழக அரசு கவலை தரும் இப்பிரச்சனைக்கும் ஒரு தீர்வு காண முன்வர வேண்டும்.
தமிழகமெங்கும் உள்ள பள்ளிக் குழந்தைகளுக்கு கிடைத்து வந்த அந்த ஒருவேளை சத்துணவாவது வெகு விரைவில் கிடைக்க வழி செய்ய வேண்டும்.
கிருமித் தொற்று பள்ளிச் சிறார்களுக்கும் தொற்றிவிடும் என்கிற அச்சுறுத்தல் நிலவுகிற இச்சூழலில் அக்குழந்தைகள் இருக்குமிடத்திற்கு அரசே கொண்டு சென்று சேர்க்கலாம். அல்லது உணவு வழங்குமிடத்திற்கே பெற்றோரை வரவழைத்து அவர்களது பிள்ளைகளுக்கான சத்துணவினை பெற்றுச் செல்லும்படி ஏற்பாடு செய்யலாம்.
பள்ளிகள் ஜூலையில் திறக்குமா? ஆகஸ்டில் திறக்குமா? என்கிற வினாக்களுக்கே விடை தெரியாத இச்சூழலில் பள்ளிகள் திறக்கும்வரை அக்குழந்தைகளை சத்தான உணவுக்காகக் காத்திருக்க வைக்காமல் குறைந்தபட்சம் ஒருவேளை சத்துணவாவது அவர்களுக்குக் கிடைக்கும்படி ஏற்பாடு செய்தால் மனதார நன்றி கூறுவார்கள் மக்கள்.
இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.