திருப்பூர்: திருப்பூரில் விவசாயிகளை பாதிக்கும் சட்டங்களை இயற்றிய மத்திய அரசை கண்டித்து சட்டநகலை எரித்த அகில இந்திய விவசாயிகள் சங்கத்தினர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

விவசாயிகளை கடுமையாக பாதிக்கும் பல்வேறு திட்டங்களை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாகவும் சட்ட திருத்தம் மற்றும் அவசர சட்டங்கள் விவசாயிகளை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது.

எனவே 1995 அத்தியாவசிய பொருட்கள் சட்ட திருத்தம், வேளாண் பொருட்கள் வணிக ஊக்குவிப்பு அவசர சட்டம்2020, விவசாயிகள் விலை உத்தரவாதம் மற்றும் பண்ணை சேவைகள் ஒப்பந்த அவசர சட்டம் 2020, மின்சார திருத்த சட்டம் 2020 ஆகியவற்றை திரும்ப பெற வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாயிகள் சங்கத்தினர் சட்ட நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, அவர்களை தடுத்த போலீசார் சட்ட நகலை எரித்த 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் சங்கத்தினரை கைது செய்தனர்.