தமிழகத்தில் கோவில்களை திறந்து பக்தர்கள் வழிபட அனுமதி வழங்கிட கோரி கோவையில் இந்து முன்னணியினர் ஒற்றைக்காலில் நிற்கும் போராட்டம்!

கோவை: தமிழகத்தில் கோவில்களை திறக்க வலியுறுத்தியும் பக்தர்கள் வழிபட அனுமதி வழங்கிட கோரி இந்து முன்னணியினர் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் ஒற்றைக்காலில் நிற்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை: தமிழகத்தில் கோவில்களை திறக்க வலியுறுத்தியும் பக்தர்கள் வழிபட அனுமதி வழங்கிட கோரி இந்து முன்னணியினர் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் ஒற்றைக்காலில் நிற்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டம் என ஐந்தாம் கட்டம் வரை ஊரடங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ள நிலையில் அரசு கட்டுபாடுகளுடன் பக்தர்கள் வழிபாடு கோவில்கள் திறக்கப்பட வேண்டும் என இந்து அமைப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, கடந்த சில தினங்களுக்கு முன்னர் கோவில்கள் முன்பு தோப்பு காரணம் போடும் நிகழ்வை இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழகத்தில் உள்ள கோவில்களில் பக்தர்கள் வழிபட அனுமதி அளிக்க அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட இந்து முன்னணி சார்பாக தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் பக்தர்களை வழிபட அனுமதிக்கக் கோரி நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் ஒற்றைக்காலில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் முன்பு உள்ள சித்தி விநாயகர் கோவில் முன்பு இந்து முன்னணியின் மாநில நிர்வாகி குணா தலைமையில் இந்து முன்னணியினர் ஒற்றைக்காலில் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் இது குறித்து அவர்கள் கூறுகையில், பல்வேறு மாநிலங்களில் கோவில்களில் பக்தர்கள் வழிபட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் தற்போது வரை கோவில்களில் பக்தர்கள் வழிபட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது எனவும் தமிழக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் இருவரும் தீவிர கடவுள் பக்தர்களாக இருந்த போதும் கோவில்களில் பக்தர்கள் வழிபட அனுமதி தற்போது வரை கொடுக்க வில்லை என்றனர்.

எனவே, உடனடியாக கோவில்களில் பக்தர்கள் வழிபட அனுமதி அளிக்க வேண்டும் எனவும் இல்லையெனில் இந்து முன்னணி சார்பில் போராட்டத்தை வலுப்படுத்துவோம் என தெரிவித்தனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...