கோவை: மேட்டுப்பாளையம் அருகே காரமடையில் 17 வயது பள்ளி மாணவியை கடத்திச் சென்று திருமணம் செய்ய முயன்றதாக வாலிபர் ஒருவரை அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்ஸோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை வேப்பம்பள்ளி பகுதியில் 12ம் வகுப்பு படித்துவரும் 17 வயது பள்ளி மாணவியும் அவினாசி தாமரைக்குளம் பகுதியைச் சேர்ந்த அவரது தூரத்து உறவினரான கருப்புசாமி என்ற 20 வயது வாலிபரும் பழகி வந்துள்ளனர்.
இந்நிலையில், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி 17 வயதான அந்த மாணவியை ஈரோட்டிற்கு கடத்திச்சென்றுள்ளான். இதையடுத்து, பெண்ணின் பெற்றோர் தங்களது மகளை கடத்திச் சென்றதாக, கருப்புசாமி மீது துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து தேடிவந்த நிலையில் ஈரோட்டில் பதுங்கியிருப்பதாக தெரியவந்தது, இதனையடுத்து, அங்கு சென்று இருவரையும் மீட்டு வந்த போலீசார் துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தி வந்தனர்.

இதில் அந்த மாணவி மைனர் என்பதால் போலீசார் அறிவுரை கூறி பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டு பின்னர் இளம்பெண்ணை கடத்திச் சென்றதற்காக கருப்பசாமி மீது போக்ஸோ சட்டத்தில் வழக்கு பதிந்து கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.