குன்னூர் அருகே காலில் பிளாஸ்டிக் குழாய் மாட்டிய நிலையில் உணவிற்காக நொண்டி நடக்கும் காட்டெருமை! வனத்துறையினர் உரிய சிகிச்சை அளிக்க பொதுமக்கள் கோரிக்கை!

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கொலக்கம்பை அருகே சட்டன் எஸ்டேட் பகுதியில் காலில் பிளாஸ்டிக் குழாய் மாட்டிக்கொண்டதால் உடல் மெலிந்த நிலையில் நடக்க முடியாமல் உணவு தேடித் திரியும் காட்டெருமைக்கு உரிய சிகிச்சை கொடுத்து காப்பாற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கொலக்கம்பை அருகே சட்டன் எஸ்டேட் பகுதியில் காலில் பிளாஸ்டிக் குழாய் மாட்டிக்கொண்டதால் உடல் மெலிந்த நிலையில் நடக்க முடியாமல் உணவு தேடி திரியும் காட்டெருமைக்கு உரிய சிகிச்சை கொடுத்து காப்பாற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் கொலக்கம்பை சட்டன் எஸ்டேட் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட காட்டெருமைகள் வாழ்ந்து வருகின்றன. இந்த காட்டெருமைகள் அவ்வப்போது சாலைகளுக்கு வந்து செல்வது வழக்கம்.



இந்நிலையில், செவ்வாய்க்கிழமை சாலை ஓரத்தில் சுற்றித் திரிந்த காட்டெருமையின் வலது பின்னங்காலில் பிளாஸ்டிக் குழாய் மாட்டிக் கொண்டிருந்தது.

இதன் காரணமாக கடுமையான வலியால் நொண்டிக் கொண்டே நடந்து செல்ல முடியாமல் உணவு எடுத்துக் கொள்வதில் மிகவும் சிரமம் ஏற்பட்டு உடல் மெலிந்து காணப்பட்டதையும் அப்பகுதி மக்கள் கண்டுள்ளனர்.

இதையடுத்து, வனத்துறையினருக்கு தகவல் அளித்த அப்பகுதி மக்கள், இந்த காட்டெருமைக்கு உரிய சிகிச்சை அளித்து, அதன் காலில் உள்ள பிளாஸ்டிக் குழாயினை அகற்றி எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...