கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட 33 பேருக்கு சிகிச்சை - சுகாதார துறை இணை இயக்குநர் தகவல்!

கோவை: கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா தொற்று காரணமாக 33 பேரும் தனியார் மருத்துவமனைகளில் 4 பேரும் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை: கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா தொற்று காரணமாக 33 பேரும் தனியார் மருத்துவமனைகளில் 4 பேரும் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் இருந்து வந்த நிலையில், 28 நாட்களுக்கு பிறகு கடந்த ஜூன் 2ம் தேதி 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, கோவையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகிறது.

இதில், வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து விமானம் மற்றும் சாலை மார்க்கமாக வந்தவர்கள் என கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.

குறிப்பாக, கடந்த 3 நாட்களில் அடுத்தடுத்து கொரோனா தொற்றால் அரசு மருத்துவமனையில் மூன்று பகுதிகள் மூடப்பட்டுள்ளது. இதனிடையே கோவையில் இன்று மேலும் 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, கொரோனா பாதித்தவர்களுக்கு கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளதாகவும் தனியார் மருத்துவமனைகளில் 4 பேரும் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார துறை இணை இயக்குநர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...