கோவை: கடந்த 3 நாட்களில் அடுத்தடுத்து கொரோனா தொற்றால் கோவை அரசு மருத்துவமனையில் மூன்று பகுதிகள் மூடப்பட்டுள்ளது நோயாளிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கடந்த 3 நாட்களில் அடுத்தடுத்து கொரோனா தொற்றால் கோவை அரசு மருத்துவமனையில் மூன்று பகுதிகள் மூடப்பட்டுள்ளது நோயாளிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் இன்று மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அரசு மருத்துவமனையில் தொண்டை புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சை செய்து கொண்ட நோயாளிக்கு கொரோனா உறுதியானதால், இஎன்டி வார்டு மூடப்பட்டுள்ளது.
கோவையில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், இன்று 11 வயது சிறுவன் சிறுவன், இரண்டு பெண்கள் உட்பட 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கணுவாய் பகுதியை சேர்ந்த 35 வயது பெண்ணுக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
கொரோனா தொற்றுடன் மும்பையில் இருந்து வந்த பயணியிடம் தொடர்பில் இருந்தவர் என்பவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதேபோல, சென்னை மயிலாப்பூரில் இருந்து சாலை வழியாக கோவை வந்த வடவள்ளியை சேர்ந்த 27 வயது ஆணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், போத்தனூரை சேர்ந்த 49 வயது ஆணுக்கு தொண்டை புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனிடையே, காட்பாடியில் இருந்து கோவை வந்த 35 வயது பெண் மற்றும் அவரது 11 வயது மகனுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. சென்னை புதுப்பேட்டையில் இருந்து கடந்த 7ம் தேதி கோவை மாவட்டம் பொள்ளாச்சி வந்த இருவருக்கும் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் கொரோனா உறுதியானது. இதையடுத்து 5 பேரும் இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் தொண்டை புற்று நோய்க்கு அறுவை சிகிச்சை செய்து கொண்ட போத்தனூரை சேர்ந்த 49 வயது ஆணுக்கு கொரோனா உறுதியானதால், கோவை அரசு மருத்துவமனையில் உள்ள காது, மூக்கு, தொண்டை பிரிவு மூடப்பட்டது. காது, மூக்கு, தொண்டை வார்டில் இருந்த அனைத்து நோயாளிகளும் வேறு வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
கோவை அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் உட்பட 11 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா தொற்றால் பிசியோதெரபி வார்டு, செவிலியர் விடுதியை தொடர்ந்து இஎன்டி வார்டு மூடப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களில் அடுத்தடுத்து கொரோனா தொற்றால் அரசு மருத்துவமனையில் மூன்று பகுதிகள் மூடப்பட்டுள்ளது நோயாளிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் 33 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 4 பேரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார துறை இணை இயக்குநர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.