கோவை: கோவை அரசு மருத்துவமனையில் பணியாற்றும் டெக்னிசியனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் வசித்த போலீஸ் கந்தசாமி வீதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
கோவை: கோவை அரசு மருத்துவமனையில் 3 நாட்களுக்கு முன்பு பிசியோதெரபிஸ்ட் வார்டில் பணிபுரியும் ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் வசித்த போலீஸ் கந்தசாமி வீதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
கோவை அரசு மருத்துவமனையில் பிசியோதெரபிஸ்ட் வார்டில் 27 வயது ஆர்த்தோட்டிக் டெக்னிசியன் பணியாற்றி வந்தார். மருத்துவ விடுப்பில் விழுப்புரத்தில் உள்ள கர்ப்பிணி மனைவியை பார்க்க சென்றுவிட்டு கோவை திரும்பியுள்ளார்.
கோவைக்கு திரும்பி வந்த பிறகு, ஒரு வார காலம் வீட்டில் தனிமைப்படுத்தி இருந்த பின்னர் பணிக்கு திரும்பிய நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதனிடையே அவர் வசித்த கோவை ராமநாதபுரம் அருகேயுள்ள போலீஸ் கந்தசாமி வீதியில் ஒரு பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, அப்பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. வெளியாட்கள் அப்பகுதிக்குள் செல்லவும், அப்பகுதியில் உள்ளவர்கள் வெளியே தடை விதிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் வசிப்பவர்கள் தனிமைபடுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.