கோவையில் ஆறாம் வகுப்பில் சேர மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வு நடத்திய சிஎஸ்ஐ ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு சீல்!

கோவை: கோவையில் பணம் தர மறுத்த தாயுடன் சண்டையிட்டு, தட்டி கேட்ட தந்தையை இரும்பு கம்பியால் தாக்கிய மகனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவையில் ஆறாம் வகுப்பில் சேர மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வு நடத்திய சிஎஸ்ஐ ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு சீல் வைக்கப்பட்டது.

கோவை சிஎஸ்ஐ ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வு இரு தினங்களாக நடத்தப்பட்டுள்ளது. தினமும் 10 முதல் 15 மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டு நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பள்ளியில் நுழைவுத் தேர்வு நடப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு பிரேம் என்பவர் புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரங்களுடன் புகார் அளித்தார்.



இதனையடுத்து, உடனடியாக பள்ளி நிர்வாகம் தேர்வு எழுத வந்த சிறுவர்களையும் அவர்களின் பெற்றோரையும் பள்ளியில் இருந்து வெளியே அனுப்பியது. இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உஷா மற்றும் தெற்கு வட்டாட்சியர் அருள்முருகன் ஆகியோர் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டனர்.

பள்ளி முதல்வர் மெர்சி மெட்டில்டா அறையில் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள், பள்ளி வளாகத்தில் முழுமையாக ஆய்வு மேற்கொண்டனர்.



இதனை தொடர்ந்து பள்ளி முதல்வர் அறை, நுழைவுத்தேர்வு நடத்திய பகுதி என அனைத்தையும் மூடி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

நுழைவுத் தேர்வு நடத்தியது தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கப்பட்டு இருப்பதாகவும், இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா தெரிவித்தார்.

பள்ளி நிர்வாகத்தை பொறுத்தவரை பத்தாம் வகுப்பு தேர்வுக்கு ஹால் டிக்கெட் வழங்கவே பள்ளி வளாகம் திறக்கப்பட்டு இருந்ததாகவும் பள்ளி திறக்கப்பட்டு இருப்பதை அறிந்த பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் பள்ளியில் சேர்க்கை நடைபெறுகின்றதா என பார்க்க வந்ததாகவும், நுழைவுத்தேர்வு எதுவும் நடத்தப்படவில்லை எனவும் தெரிவித்தனர். இந்த நுழைவுத் தேர்வு விவகாரம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...