கோவை: சென்னையிலிருந்து கோவை வந்த தாய் மற்றும் 4 வயது குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவை: சென்னையிலிருந்து கோவை வந்த தாய் மற்றும் 4 வயது குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் இன்று காலை மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னையில் இருந்து கோவை வந்த மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவை பீளமேடு செல்லும் ஆவாரம் பாளையம் சாலையில் உள்ள குடியிருப்பு பகுதியில் வசித்து வந்த தாய் மற்றும் 4 வயது குழந்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னையில் இருந்து திரும்பியுள்ளனர்.
இந்நிலையில், திங்களன்று கொரோனா சோதனைக்கு, அவர்கள் உட்படுத்தப்பட்ட நிலையில், இன்று தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, உடனடியாக மேல்சிகிச்சைக்காக இருவரும் அவினாசி சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து, அந்த குடியிருப்பு பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.