கோவையில் இன்று 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!
கோவை: கோவையில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில்,இன்று ஒரு பெண் உட்பட 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கணுவாய் பகுதியை சேர்ந்த 35 வயது பெண்ணுக்கு, மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனா தொற்றுடன் மும்பையில் இருந்து வந்த பயணியிடம் தொடர்பில் இருந்தவர் என்பவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதேபோல, சென்னை மயிலாப்பூரில் இருந்து சாலை வழியாக கோவை வந்த வடவள்ளியை சேர்ந்த 27 வயது ஆணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், போத்தனூரை சேர்ந்த 49 வயது ஆண் காது, மூக்கு, தொண்டை பிரச்சனை காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து 3 பேரும் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.