திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் 349 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு மாணவர்கள் அச்சமின்றி பொதுத்தேர்வு எழுத அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் 11ம் தேதி தொடங்கி நடைபெற உள்ள நிலையில் திருப்பூர் மாநகராட்சி ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாணவிகளுக்கான ஹால் டிக்கெட் மற்றும் முக கவசங்களை இன்று வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், திருப்பூர் மாவட்டத்தில் 349 தேர்வு மையங்களில் 29 ஆயிரத்து 746 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத உள்ளதாகவும் அச்சமின்றி தேர்வு எழுத அனைத்து விதமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், தேர்வு அறைகளில் காலை, மதியம் என இரு நேரங்களில் கிருமிநாசினி தெளிக்கவும், மாணவர்கள் தேர்வு எழுதும் முன் கை கழுவுவதற்கு தேவையான அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.