திருப்பூர்: திருப்பூரிலிருந்து மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்வு எழுதுவதற்காக பிற மாவட்டங்களுக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் வருகின்ற 15ம் தேதி தொடங்கி நடைபெற உள்ள நிலையில், சென்னை, சேலம் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளிகள் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் 22 பேர் திருப்பூரில் இருந்தனர்.

இந்நிலையில், அவர்களை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டு, சென்னைக்கு 8 மாணவர்கள், தஞ்சைக்கு 2 பேர், தர்மபுரி 4 பேர், சேலம் 4 பேர், திருவள்ளூருக்கு 4 பேர் என மொத்தம் 22 மாணவ, மாணவிகள் அவர்கள் படிக்கும் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும், அவர்களுக்கு தேவையான உணவு, தண்ணீர் உள்ளிட்ட வசதிகளுடன் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வழி அனுப்பி வைக்கப்பட்டனர்.