நீலகிரி: உலகப்புகழ் பெற்ற தாவரவியல் பூங்காவை உருவாக்கிய வில்லியம் கிரெகம் மெக்ஜவர் அவர்களின் 144வது நினைவு நாளை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

சர்வதேச அளவில் உலகப்புகழ் பெற்ற சுற்றுலா தலமான உதகை அரசு தாவரவியல் பூங்காவை 1848ம் ஆண்டு பூங்கா அமைப்பதற்கான பணிகள் துவங்கப்பட்டு 19 வருடங்கள் கழித்து புகழ்பெற்ற அரசு தாவரவியல் பூங்கா அமைக்கப்பட்டது.
ஆண்டுக்கு சுமார் 30 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் தாவரவியல் பூங்காவை உருவாக்கிய மெக்ஜவர் அவர்கள் 1876ம் ஆண்டு ஜூன் எட்டாம் தேதி இயற்கை எய்தினார். அவரது கல்லறை உதகை ஸ்டீபன் பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்று அவரது 144 வது நினைவு தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் தோட்டக்கலை துறையினர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.