கோவை: கோவை கோணவாய்க்கால் பாளையம் பகுதியில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை கோணவாய்க்கால் பாளையம் அருகே அற்புதம் நகர் பகுதி உள்ளது. இப்பகுதியில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கோவை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. குடியிருப்புகளுக்கு அருகே உள்ள சிறுவர் பூங்கா பகுதியில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகளை துவக்க வந்த அதிகாரிகளை அப்பகுதி மக்கள் சிறைபிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சிறுவர் பூங்காவில் குடியிருப்புகளுக்கு அருகே கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்கக் கூடாது எனவும் வேறு இடத்தில் அதனை அமைத்திட வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுடன் மாநகராட்சி அதிகாரிகள் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.