சுற்றுலா பயணிகள் அதிகளவில் வரத்தொடங்கியதால் உதகை - கோவை இடையிலான பேருந்து போக்குவரத்து நிறுத்தம்!

கோவை: சுற்றுலா பயணிகள் அதிகமாக வரத்தொடங்கியதால் உதகை முதல் கோவை இடையிலான பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டு மேட்டுப்பாளையம் வரை மட்டுமே இயக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து, தினமும் 7 பேருந்துகள் மட்டுமே உதகையில் இருந்து இயக்கப்படுவதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நீலகிரி: சுற்றுலா பயணிகள் அதிகமாக வரத்தொடங்கியதால் உதகை முதல் கோவை இடையிலான பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டு மேட்டுப்பாளையம் வரை மட்டுமே இயக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து, தினமும் 7 பேருந்துகள் மட்டுமே உதகையில் இருந்து இயக்கப்படுவதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த இரு மாதங்களாக பேருந்து, ரயில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது. இதனிடையே, ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில், அதில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டன.

தமிழகம் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு 50 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டன. அதில், கோவை மண்டலத்தில் கோவையிலிருந்து உதகைக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. இந்த பேருந்துகளில், பயணிகள் என்ற பெயரில் பல்வேறு காரணங்களை கூறி சுற்றுலா பயணிகள் உதகைக்கு அதிகளவில் வரத் தொடங்கினர்.

இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட நிர்வாகம் கோவை - உதகை இடையிலான பேருந்து போக்குவரத்தை ரத்து செய்தது. தொழிலாளர்களை மட்டும் ஏற்றி வருவதற்காக தினமும் காலை மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு ஏழு பேருந்துகள் மட்டும் இயக்கப்படுவதாகவும், கூட்டத்ததைப் பொருத்து 32 முதல் 34 இருக்கைகளுடன் பேருந்துகள் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு மிகவும் பாதுகாப்புடன் இயக்கப்படுவதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...