திருப்பூரில் முகக் கவசம் இன்றி வெளியில் நடமாடும் பொதுமக்கள்..! வருத்தம் தெரிவித்த மாவட்ட ஆட்சியர்!

திருப்பூர்: முகக் கவசம் இன்றி பொதுமக்கள் வெளியே நடமாடுவதை காணும் போது வருத்தமாக உள்ளதாக நேற்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் சமூக வலைதளங்களில் பதிவு செய்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.


திருப்பூர்: முகக் கவசம் இன்றி பொதுமக்கள் வெளியே நடமாடுவதை காணும் போது வருத்தமாக உள்ளதாக நேற்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் சமூக வலைதளங்களில் பதிவு செய்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

திருப்பூர் மாவட்டத்தில் 114 பேர் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின்னர் அனைவரும் நலமுடன் வீடு திரும்பியுள்ளனர் தற்பொழுது தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு இல்லாத மாவட்டமாக திருப்பூர் விளங்கி வருகிறது.



மேலும் திருப்பூர் மாவட்டம் பச்சை மண்டலமாகவும் விளங்கி வருகிறது இந்நிலையில், நேற்று காலை திருப்பூர் தென்னம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள மீன் மார்க்கெட்டில் மீன் வாங்குவதற்காக ஏராளமான பொதுமக்கள் ஒரே இடத்தில் கூடியதுடன் பெரும்பாலான மக்கள் முக கவசம் அணியாமலும் சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன், திருப்பூரில் தற்பொழுது பாதிப்பு இல்லை என்றாலும் பொதுமக்கள் அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் வெளியில் வரும் பொதுமக்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்திருக்க வேண்டும் எனவும் தற்பொழுது பலரும் முககவசம் அணிவதில்லை எனவும் அதுபோன்று முகக்கவசம் அணியாதவர்களை கண்டால் வருத்தமாக உள்ளதாகவும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் உருக்கமாகப் பேசி வீடியோ ஒன்றை பதிவு செய்திருந்தார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது .

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...