கோவையில் ஆன்லைன் வகுப்பு குறித்து வாட்ஸ்அப் குழுவில்  பெற்றோர்கள் பேசியதால், மாணவர்களை நீக்கிய பள்ளி - பெற்றோர் குற்றச்சாட்டு.

கோவையில் ஆன்லைன் வகுப்பு குறித்து வாட்ஸ்அப் குழுவில்  பெற்றோர்கள் பேசியதால், மாணவர்களை பள்ளியை விட்டு நீக்கியது  பள்ளி - பெற்றோர் குற்றச்சாட்டு

கோவை: கோவையில் ஆன்லைன் வகுப்பு குறித்து வாட்ஸ்அப் குழுவில்பெற்றோர்கள் பேசியதால், மாணவர்களை பள்ளியை விட்டு நீக்கியது பெற்றோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பத்ம சேஷாத்ரி பால பவன் (பிஎஸ்பிபி) என்கிற சிபிஎஸ்இ பள்ளி தமிழகத்தில் கோவை உட்பட, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய இடங்களில் இயங்கி வருகிறது. 

கோவை வடவள்ளி பகுதியில் இயங்கும் இந்த பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். 

தற்போது கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக கல்வி நிலையங்கள் திறக்கப்படாமல் மூடப்பட்டுள்ள நிலையில், ஆன்லைன் மூலம் வகுப்புகள் இப்பள்ளியில் நடைபெற்று வந்துள்ளது.

இந்நிலையில், வடவள்ளி பகுதியை சேர்ந்த அருணா என்பவரின் இரட்டை குழந்தைகள் இந்த பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தனர். கொரோனாவால் இந்த பள்ளி ஆன்லைன் வாயிலாக கடந்த 1ம் தேதி முதல் வகுப்புகள் எடுக்கவுள்ளதாக பெற்றோர்களுக்கு தகவல் அனுப்பியது, அதற்காக பெற்றோர்கள், பள்ளி ஆசிரியர் அடங்கிய வாட்ஸ் அப் குழு ஒன்றும் துவங்கப்பட்டு உள்ளது.

ஆன்லைன் வகுப்புகளுக்கான லாகின் ஐ.டி., பாஸ்வார்டு ஆகியவையும் தரப்பட்டுள்ளது. 

கடந்த 3ம் தேதி ஆன்லைன் வகுப்புகள் நடந்துகொண்டிருந்தசில மணி நேரத்தில் அருணாவின் இரண்டு குழந்தைகள் வகுப்பிலிருந்து நீக்கப்பட்டதுடன், பெற்றோர்கள், ஆசிரியர் அடங்கிய வாட்ஸ் அப் குழுவிலிருந்தும் அருணா நீக்கப்பட்டு இருக்கிறார்.

என்ன காரணத்திற்காக தன்னை குழுவில் இருந்து நீக்கினர்..? என்பது தெரியாமல் அதிர்ச்சியடைந்த அருணா பள்ளியின் நிர்வாக அதிகாரியான ஜீவரத்தினம் என்பவரை தொடர்பு கொண்டு காரணம் கேட்டுள்ளார். ஆனால், சரியான விளக்கம் அவரிடம் கிடைக்கப்பெறவில்லை என்பதால், பள்ளியின் தாளாளர் ஹேமலதாவிற்கு மின்னஞ்சல் மூலம் நடந்தவற்றை பற்றி தெளிவாக குறிப்பிட்டு, ஏன் தன் இரு குழந்தைகளும் ஆன்லைன் வகுப்பில் இருந்து நீக்கப்பட்டனர் என கேள்வி எழுப்பியுள்ளார். 

இது குறித்து நம்மிடம் பேசிய அருணா, இப்படி கூட பள்ளிகள் நடந்து கொள்வார்களா என்று அதிர்ச்சியாக உள்ளது என தெரிவித்தார். மேலும், தன் குழந்தைகளுக்கு ஏற்பட்ட மனஉளைச்சல் மற்றும் வேதனைக்கு தகுந்த நீதி கிடைக்க நீதி மன்றத்துக்கு செல்ல தயார் எனவும் கூறினார். 

"ஊரடங்கு காலத்தில் பெரியவர்களை விட மனதளவில் குழந்தைகள் தான் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், ஆன்லைன் வகுப்புகள் மூலம் சற்றே நிம்மதி அடைந்துள்ள குழந்தைகளுக்கு இது போன்று கூடுதல் மனஉளைச்சல் தரும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். 

மேலும், இது குறித்து கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாக நடந்தவற்றை ஆதாரத்துடன் அனுப்பியுள்ளதாக தெரிவித்தார்.



இவரை போல், அப்பள்ளியில் பல பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் உள்ளதாகவும், அவர்கள் பிள்ளைகளும் ஆன்லைன் வகுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர், என தெரிவித்தார். 

"நாங்கள், பெற்றோர்கள் ஒன்றிணைந்து வாட்ஸ்அப் குழுவை உருவாக்கியதும் அதில் கல்வி கட்டணம் மற்றும் ஆன்லைன் வகுப்புகள் பற்றி கருத்துக்கள் பதிவு செய்ததன் விளைவு தான் இந்த நடவடிக்கை", என்றார்.

"இதில் வேடிக்கை என்னவென்றால், நான் பள்ளி நிர்வாகத்தை பற்றியோ, ஆன்லைன் வகுப்பு நடத்துவது பற்றியோ எந்த விதமான மாற்று கருத்துக்களும் பதிவிடவில்லை.

எந்த காரணமாக இருந்தாலும், இப்படி பிள்ளைகளை பள்ளியில் இருந்து எந்த அறிவிப்பும் இல்லாமல் நீக்கியுள்ளது ஒருபோதும் ஏற்கமுடியாது", என தெரிவித்தனர். 

மேலும், தங்களின் குழந்தைகளின் கல்வி மற்றும் மனநிலையை மிகவும் பாதித்த இந்த சம்பவத்திற்கு நியாயம் கிடைக்க உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளோம் என பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே, பொது முடக்கத்தால் வேலையிழப்பு, ஊதிய குறைப்பு ஆகிய காரணங்களால் செய்வதறியாமல் உள்ள நிலையில் பள்ளியின் இச்செயல் பெற்றோர்களுக்கு மட்டுமின்றி குழந்தைகளுக்கும் மன ரீதியான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது, என பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...