கோவை: கோவையில் வரும் திங்கட்கிழமை முதல் முக கவசம் இன்றி வந்தால் ஒவ்வொரு முறையும் 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது மாநகர காவல் ஆணையர் சுமித்சரண், மாநகராட்சி ஆணையர் ஷரவன்குமார் ஜடாவத் ஆகியோர் உடன் இருந்தனர்.
அப்போது, மாவட்ட ஆட்சியர் பேசுகையில், கோவையில் மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது எனவும் முக கவசம் அணிய வேண்டும் என்றும் தனி மனித இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
கோவையில் சமீபகாலமாக பலர் முக கவசம் அணிவது இல்லை என்பதையும் சமூக இடைவெளியை கடைபிடிப்பதில்லை என்பதையும் உணர்கின்றோம் எனவும் அவர் தெரிவித்தார். கோவை விமான நிலையத்திற்கு இதுவரை 54 விமானங்கள் வந்துள்ளதாகவும் இதில் 43 பேருக்கு கொரோனா தொற்று இருந்துள்ளது தெரியவந்துள்ளது என்றார்.
கோவையில் மீண்டும் கொரோனா பரவி விடக்கூடாது என்பதில் தீவிரமாக இருக்கின்றோம் என தெரிவித்த அவர், வரும் திங்கட்கிழமை முதல் கோவையில் கண்காணிப்பினை தீவிர படுத்த இருப்பதாக தெரிவித்தார்.
மேலும், திங்கட்கிழமை முதல் முக கவசம் இன்றி வந்தால் ஒவ்வொரு முறையும் 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும்
சமூக இடைவெளியின்றி இருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார். சமூக இடைவெளியை கடைபிடிக்காத நிறுவன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிய அவர், கோவையில் சுமார் 4000 பேர் தனிமைபடுத்தப்பட்டு உள்ளதாகவும் அவர்கள் வெளியில் வந்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இருந்த போது பயமில்லாத சூழல் இருந்ததாக தெரிவித்த மாவட்ட ஆட்சியர், கொரோனா வைரஸ் தன்மை சமீபத்தில் மாறியுள்ளது எனவும் இதை மக்கள் உணர வேண்டும் என தெரிவித்தார்.
பொது மக்கள் அலட்சியமாக இருக்க கூடாது என கூறிய அவர், பொது வெளியில் வரும் போது சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் முக கவசம் அணியாமல் இருந்ததற்காக மாநகராட்சி இதுவரை 4 லட்சம் ரூபாய் அபராதம் வசூல் செய்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும், கோவையில் இதுவரை பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 29 பேர் சிகிச்சையில் இருப்பதாகவும் இதில் 3 பேருக்கு சுவாச கருவிகள் பொருத்தப்பட்டு இருப்பதாகவும் மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்தார்.