நீலகிரி: நீலகிரி மாவட்ட தீயணைப்பு துறை சார்பில் மாணவ, மாணவிகள், பள்ளிகளுக்கு செல்வதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டிய கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் இன்றைய தினம் வரை 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர்கள் அனைவரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில், இங்குள்ள பள்ளியில் படிப்பவர்களில் வெளி மாவட்டம் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வந்து தங்கி படிப்பவர்கள் எண்ணிக்கை கணிசமாக உள்ளதால் தீயணைப்புத் துறை சார்பில் பள்ளி மாணவ மாணவியருக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கொரோனா பரவுவது குறித்து ஓவியப்போட்டி மற்றும் பரவலை தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தீயணைப்பு நிலைய அதிகாரி மோகன், முரளி, கண்ணன் உள்ளிட்ட வீரர்கள் பலர் கலந்து கொண்டனர்.