கோவை: வால்பாறை பழங்குடியின மக்களுக்கு கொரோனா நிவாரண உதவியை சி.எஸ்.ஐ திருச்சி தஞ்சை பேராயர் சந்திரசேகரன் வழங்கினார்.

கோவை மாவட்டம் வால்பாறையில், அடர்ந்த வனப்பகுதியில் காடர், முதுவர், புலையர் மற்றும் மலசார் இன மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், வால்பாறையை அடுத்த காடம்பாறை பகுதியில் உள்ள கீழ் பூனாச்சி, வெள்ளிமுடி பகுதியில் உள்ள 60 பழங்குடியின குடும்பங்களுக்கு சி.எஸ்.ஐ திருச்சி தஞ்சை பேராயர் சந்திரசேகரன் தலைமையில், நிவாரண பொருட்கள் சமையல் தொகுப்பு மற்றும் காய்கறிகள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில், சி.எஸ்.ஐ திருச்சி தஞ்சை திருமண்டல பேராயர் சந்திரசேகரன், ஆனைமலை மறைமாவட்ட தலைவர் ஜெயராஜ், செயலாளர் ஆயர் சுதர்சன், ஆனைமலை புலிகள் காப்பக உதவி வன பாதுகாவலர் செல்வம் தாசில்தார் ராஜா, அரசுத்துறை அதிகாரிகள் பழங்குடியின மக்கள் திரளாக பங்கேற்றனர்.
இதனை தொடர்ந்து, வால்பாறை நகராட்சியில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்கள் 115 பேர்களுக்கு, சி.எஸ்.ஐ திருச்சி தஞ்சை திருமண்டல பேராயர் சந்திரசேகரன், வால்பாறை நகராட்சி ஆணையாளர் பவுன்ராஜ், காவல்துறை ஆய்வாளர் மகேஷ்வரி, ஆனைமலை மறைமாவட்ட தலைவர் ஜெயராஜ் ஆகியோர் நிவாரண உதவிகள் வழங்கினர். இந்த நிகழ்வில் ஆயர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.