கோவை: கோவை பந்தைய சாலையில் மாவட்ட ஆட்சியர், வருவாய் அலுவலரின் வீடு, நீதிபதிகள் குடியிருப்பு மற்றும் அரசு ஊழியர்கள் என ஏராளமானோர் வசித்து வருகின்றனர்.
கோவை: கோவை பந்தைய சாலையில் மாவட்ட ஆட்சியர், வருவாய் அலுவலரின் வீடு, நீதிபதிகள் குடியிருப்பு மற்றும் அரசு ஊழியர்கள் என ஏராளமானோர் வசித்து வருகின்றனர்.
கடந்த சில வருடங்களுக்கு முன் தாமஸ் பகுதியில் இருந்த குடியிருப்பு மற்றும் வன அலுவலர் குடியிருப்புகள் இடிக்கப்பட்டன. தற்போது டி.ஆர்.ஓ காமப்வுண்ட் குடியிருப்பு மற்றும் அதனை சுற்றி உள்ள வீடுகளில் பலர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், இடிக்கப்பட்ட டி.எப்.ஓ காம்பவுண்ட் அருகில் இருக்கும் ஹோட்டல் மற்றும் பல பகுதிகளில் இருந்து உணவு பொட்டலங்களை வாங்கி வரும் நபர்கள், அங்கு காலியாக இருக்கும் இடத்தில் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தி மது அருந்துவதும், குடித்த பின்னர் பாட்டில்களை அங்கேயே விட்டு செல்வது வாடிக்கையாகி விட்டது, என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலும், சொகுசு கார்களில் வரும் இளைஞர்கள் மது அருந்துவது, நேரம் கடந்து காரிலேயே அமர்ந்து உணவருந்தி விட்டு அங்கேயே குப்பை மற்றும் சிகரெட் பாக்கெட்டுகளை வீசி சென்று விடுகின்றனர். மேலும், அப்பகுதியில் தான் மாவட்ட சுகாதார துறையின் பின் வாசல் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக அப்பகுதியில் குடியிருப்பவர்கள் தெரிவிக்கின்றனர். மாலை நேரங்களில், அப்பகுதியில் போலீசார் ரோந்து வருவதில்லை எனவும், அதை சாதகமாக பயன்படுத்தி சிலர் மது அருந்திவிட்டு பாட்டில்களை வீசி செல்வதாக புகார் எழுந்துள்ளது.
மேலும், அரசு அதிகாரிகள், ஊழியர்கள் அதிகம் வசிக்கும் இந்த இடத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் இருப்பதால் காவல்துறையினர் ரோந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும், என வேண்டுகோள் விடுத்தனர்.