கோவை: கோவையில் அதிவேகமாக காரை ஒட்டி கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்படுத்தியதில் பெண் ஒருவர் பலியானார். மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோவை செட்டிவீதி பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ்(44). இவர் நேற்று சுங்கம் பைபாஸ் சாலையில் தனது போர்ட் ஈக்கோ நான்கு சக்கர வாகனத்தில் அதிவேகமாக பயணித்து உள்ளார்.
இந்நிலையில், சிவராம் நகர் சூளைகல் மாரியம்மன் கோவில் அருகே வந்து கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து சாலையில் நடந்து சென்ற சுப்புலட்சுமி(50) என்ற மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
மேலும், அந்த வழியாக வந்த மாரிமுத்துவின்(60) மீதும் மோதியதால் அவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார்.
இது குறித்து தகவலறிந்து வந்த கிழக்கு போக்குவரத்து போலீசார் சுப்புலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காரை ஓட்டி வந்த சந்தோஷ் தப்பியதால் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.