திருப்பூரில் இருந்து ஜார்கண்டிற்கு சிறப்பு ரெயிலில் 1,600 தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு

திருப்பூர்: திருப்பூரில் உள்ள நிறுவனங்களில் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட வெளி மாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இதில் தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்கள் ஆறு லட்சம் பேர் மற்றும் வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் 2 லட்சம் பேர் ஆவர்.

திருப்பூர்: திருப்பூரில் உள்ள நிறுவனங்களில் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட வெளி மாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இதில் தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்கள் ஆறு லட்சம் பேர் மற்றும் வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் 2 லட்சம் பேர் ஆவர்.

கொரோனா பாதிப்பின் காரணமாக நாடு முழுவதும் 58 வது கட்டமாக வருகிற 30 ஆம் தேதி வரை ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கின் காரணமாக வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வந்து கொண்டிருந்தனர். இதனால் அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பிவைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.

இதனைத்தொடர்ந்து திருப்பூர் மாவட்டத்தில் இருந்து வடமாநில தொழிலாளர்களில் சொந்த ஊர்களுக்கு செல்ல விருப்பம் உள்ளவர்கள், வருவாய்த்துறை அதிகாரிகளிடம் செல்போன் எண் மற்றும் ஆதார் எண்ணை கொடுத்து பதிவு செய்து வருகிறார்கள். அதன்படி பல்வேறு கட்டங்களாக சிறப்பு ரெயில்களில் தொழிலாளர்கள் அனுப்பிவைக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், இன்று திருப்பூரில் இருந்து ஜார்கண்ட் மாநிலம் தன்பந்திற்கு ஒரு சிறப்பு ரெயில் சென்றது. அதில், 1,600 தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

முன்னதாக, திருப்பூர் ரெயில் நிலையத்திற்கு வந்தவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், உணவு மற்றும் தண்ணீர் பாட்டில்கள் வழங்கி ரெயிலில் அனுப்பிவைக்கப்பட்டனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...