கோவை குறு சிறு தொழில் அமைப்புகளின் கூட்டத்தில் ஜிஎஸ்டி தொகை கட்ட தவறிய தொழில் முனைவோர்களிடம் வசூலிக்கப்பட்ட அபராத தொகையினை திரும்ப பெற்று தர கோரிக்கை!

கோவை: கோவை காஸ்மாபேன் அலுவலகத்தில் நடைபெற்ற குறு சிறு தொழில் அமைப்புகளின் கூட்டத்தில் ஜிஎஸ்டி தொகை கட்ட தவறிய தொழில் முனைவோர்களிடம் வசூலிக்கப்பட்ட அபராத தொகையினை திரும்ப பெற்று தர கோரிக்கை விடப்பட்டது.

கோவை: கோவை காஸ்மாபேன் அலுவலகத்தில் நடைபெற்ற குறு சிறு தொழில் அமைப்புகளின் கூட்டத்தில் ஜிஎஸ்டி தொகை கட்ட தவறிய தொழில் முனைவோர்களிடம் வசூலிக்கப்பட்ட அபராத தொகையினை திரும்ப பெற்று தர கோரிக்கை விடப்பட்டது.

கோவையில் குறு சிறு தொழில் அமைப்புகளின்(FOC IA) வின் கூட்டம் நேற்று காஸ்மாபேன் அலுவலகத்தில் நடைபெற்றது.



இந்த கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வானதிசினிவாசன் அவர்கள் பங்கேற்று, அரசு அறிவித்துள்ள கடன் திட்டங்கள் பெறுவதில் தொழில் முனைவோர்களுக்கு உள்ள பிரச்னைகளை கேட்டு அறிந்தார்.

அப்போது, அவரிடம் தொழில் முனைவோர்கள் முன்வைக்கப்பட்ட கோரிக்கையில், கொரோனா பாதிப்புகளில் இருந்து தொழில் துறையினரை மீட்டு எடுக்க மத்திய அரசு அறிவித்து உள்ள கடன் திட்டத்தில் ஏற்கனவே வங்கிகளில் மூலதனம் கடன் பெற்றவர்களுக்கும் மிசினரி கடன் பெற்றவர்களுக்கு மட்டும் அவர்களின் நிலுவையில் உள்ள கடன்களை கணக்கில் எடுத்து அதில் 20 சதவீதம் கடன் வழங்கி வருகிறார்கள். அதுவும் கொரோனாவிற்கு முன்வரை மாத தவணை சரியாக கட்டியவர்களுக்கு தான் இந்த கடன் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

இந்த நடவடிகையால் எற்கனவே இருந்த பொருளாதார வீழ்ச்சியால் ஓரிரு மாதங்கள் தவணை கட்ட தவறிய குறு தொழில் முனைவோர்களால் கடன் பெற முடியாமல் தவித்து வருகிறார்கள். மேலும், கோவை போன்ற தொழில் நகரங்களில் ஒரிரு இயந்திரங்களை வைத்து ஜாப்பாடர்களை மட்டும் நம்பி 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறுந்தொழில் முனைவோர்கள் வங்கியில் நடப்பு கணக்கு வைத்து இருந்தாலும், இதுவரை அவர்களால் வங்கியில் கடன் பெற முடியாதவர்களுக்கு தற்போது அரசு அறிவித்து உள்ள கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வருவதுக்கான கடன் கூட வங்கிகள் தர மறுத்து வருகிறது.

மேலும், உண்மையான குறுந்தொழில் முனைவோர்கள் கடும் நெருக்கடியில் உள்ளனர். அரசு அறிவித்துள்ள கடன் திட்டத்தின் மூலம் வங்கிகளில் நடப்பு கணக்கு வைத்து உள்ள அனைத்து தொழில் முனைவோர்களுக்கு கடன் வழங்க அரசு வங்கிகளில் வரவு செலவுகள் செய்து வரும் குறுந்தொழில் முனைவோர்கள் தகுதிக்கு தக்க கடன் வழங்க நடவடிக்கை எடுத்திட நிதி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்ல கோரிக்கை வைக்கப்பட்டது.

அதேபோல, கீர்ல் வெட்கிரைண்டர்களுக்கு தேவைப்படும் ஆட்டுக்கள் உற்பத்தியில் ஈடுபடும் தொழில் முனைவோர்களுக்கும் ஒரு மிசின், வெல்டிங், ஒரு லேத் மிசினரிகள் வைத்து வங்கியில் கணக்கு கூட தொடங்க முடியாமல் தொழில் செய்து வரும் தொழில் முனைவோர்களுக்கும் அரசு எதாவது வகையில் உதவிட கோரிக்கை முன்வைத்த போது, இவர்கள் போல் தொழில் செய்து வருபவர்களுக்கு வங்கியில் இருந்து கடன் பெறுவதுக்கு பதிலாக மைக்ரோ பைனான்சியல் முலம் கடன் பெற்று கொடுக்க நடவடிக்கை எடுக்க உதவி புரிவதாக கூறினார்.

மேலும், தற்போது GST கமிட்டி கூட உள்ள நிலையில், GST தொகை கட்ட தவறிய தொழில் முனைவோர்களிடம் வசூலிக்கப்பட்ட அபராத தொகையினை திரும்ப பெற்று தர நிதி அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்க கேட்டு உள்ளோம்.

அதேபோல, ஜாப்பாடர்கள் செய்பவர்கள் குறு சிறு தொழில் முனைவோர்கள் உற்பத்தி செய்யும் உதிரிபாகங்களுக்கு 5 சதவீதம் GST கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க உதவிட வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்தனர்.

இந்த சந்திப்பில் கூட்டு அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் பங்கேற்றனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...